முக்கியச் செய்திகள் தமிழகம்

தமிழ்நாட்டிற்கு வந்த 6 லட்சம் கோவிட்ஷீல்டு தடுப்பூசிகள்

புனேவில் இருந்து சென்னை வந்த ஆறு லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பப்பட்டன.

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்களிடம் ஆர்வம் அதிகரித்துள்ள நிலையில், தட்டுப்பாடு காரணமாக தடுப்பூசி போடும் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனிடையே, மத்திய அரசு தொகுப்பில் இருந்து, ஜுலை மாதத்திற்கான ஒதுக்கீட்டில் ஆறு லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் புனேவில் இருந்து நேற்றிரவு சென்னை வந்தடைந்தன.

விமான நிலையத்தில் இருந்து தேனாம்பேட்டையில் உள்ள மாநில சுகாதார கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்ட தடுப்பூசிகளை, உடனடியாக மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பும் பணியை அதிகாரிகள் மேற்கொண்டனர். முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இன்று முதல் அனைத்து மாவட்டங்களிலும் தடையின்றி தடுப்பூசி போடப்படும் எனத் தெரிவித்தார்.

Advertisement:
SHARE

Related posts

தைப்பூச திருவிழா: பொது விடுமுறை நாளாக தமிழக அரசு அறிவிப்பு!

Jayapriya

பிரபல நடிகை திடீர் திருமணம்: டிவி நடிகரை மணந்தார்

Halley karthi

யானைகளுக்கு கொரோனா பரிசோதனை: அமைச்சர் தகவல்!

Ezhilarasan