முக்கியச் செய்திகள் சினிமா

’தொரட்டி’ படத்தின் கதாநாயகர் ஷமன் மித்ரு கொரோனாவால் உயிரிழப்பு!

தொரட்டி’ படத்தின் கதாநாயகர் ஷமன் மித்ரு கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார்.

2019 ஆம் ஆண்டு வெளியான தொரட்டி திரைப்படத்தில் கதாநாயகராக நடித்தவர் ஷமன் மித்ரு. இவர் புதுப்பேட்டை, வெண்ணிலா கபடிக்குழு, காலா, அசுரன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். கடந்த ஒரு மாத காலமாக கொரோனா தொற்றால், பாதிக்கப்பட்டு சென்னை குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டுத் தொடர்ந்து திரைப்பிரபலங்கள் பலரும் சமீபத்தில் உயிரிழந்தனர். நடிகர்கள் பாண்டு, கில்லி மாறன், தயாரிப்பாளர் சேலம் சந்திரசேகர், அம்மா கிரியேஷன்ஸ் வெங்கட் ஆகியோர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். இத்தொடர் மரணங்கள் திரைத்துறையினரைச் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

Advertisement:

Related posts

மீண்டும் களத்தில் விஜயகாந்த்!

Niruban Chakkaaravarthi

டிஜிட்டல் வானொலியில் தமிழைப் புறக்கணிப்பதா? டாக்டர் ராமதாஸ் குற்றச்சாட்டு

Halley karthi

கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பசவராஜ் பொம்மை தேர்வு

Halley karthi