முக்கியச் செய்திகள் தமிழகம்

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைப்பு

தமிழ்நாடு சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர், தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த ஆகஸ்ட் 13ம் தேதி பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து 14ம் தேதி வேளாண்மை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து கடந்த மாதம் 23ம் தேதி முதல் ஒவ்வொரு துறையின் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. இந்நிலையில், தமிழ்நாடு சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர், தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

முன்னதாக நிறைவுரையாற்றிய சபாநாயகர் அப்பாவு, யாருடைய மனமும் புண்படாமல் பேச வேண்டும் என உறுப்பினர்களிடம் முதலமைச்சர் கூறியதாக குறிப்பிட்டார். எதிர்கட்சியினருக்கு அதிக வாய்ப்பு கொடுப்பதாக ஆளுங்கட்சி உறுப்பினர்கள் சொல்வதே, இக்கூட்டம் நடுநிலையாக செயல்படுவதற்கு எடுத்துக்காட்டு எனவும் தெரிவித்தார்.

 

பேரவை நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் பேரவை கூடுவதற்கு முன்னதாகவே வந்து முதலமைச்சர் உதவியாக இருந்தார் எனக்கூறிய அவர், பேரவையை செம்மையாக நடத்துவதில் உதவியாக இருந்த பேரவை முன்னவருக்கும் சபாநாயகர் அப்பாவு நன்றி தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், சட்டப்பேரவை கூட்டத்தொடரை மறுதேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைப்பதாக அறிவித்தார்.

 

ஆகஸ்ட் 13-ம் தேதி தொடங்கிய தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 23 நாட்கள் நடைபெற்ற சட்டப்பேரவையில் ஆகஸ்ட் 13-ம் தேதி தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையும், 14-ம் தேதி வேளாண் நிதிநிலை அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது. தமிழ்நாடு சட்டப்பேரவை 28 நாட்கள் நடைபெற்றது, இதில் 8ம் தேதி மாலையில் ஒரு நாள் மட்டும் பேரவை கூடியது என்பது குறிப்பிடதக்கது. சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் மொத்தம் 126 மணி நேரம் செயல்பட்டதாக தெரிவித்த சபாநாயகர் அப்பாவு, பேரவை கூட்டம் நடைபெற்ற அனைத்து நாட்களும் 65 உறுப்பினர்கள் வந்ததாகவும், சட்டமன்ற நூலகத்திற்கு 137 உறுப்பினர்கள் வந்ததாகவும் அறிவித்தார்.

Advertisement:
SHARE

Related posts

மேம்பாலத்தின் தூண் இடிந்து விழுந்த சம்பவத்தில் 2 பேர் உயிரிழப்பு

Vandhana

புதுச்சேரியில் நாளை முதல் இரவு ஊரடங்கு!

Gayathri Venkatesan

ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை 90% முடிந்துவிட்டது: உச்ச நீதிமன்றத்தில் ஆணையம் தகவல்.

Ezhilarasan