5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு கட்டணமில்லா பயணத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சா.சி.சிவசங்கர் அறிவித்துள்ளார்.
சட்டமன்றத்தில் இன்று போக்குவரத்து மற்றும் சுற்றுலாத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் விவாதங்களுக்கு பதிலுரை வழங்கி புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அமைச்சர் சிவசங்கர் பேசும்போது, யாரும் கோரிக்கை வைக்காமல், போராட்டம் நடத்தாமல் மகளிருக்கு இலவச பயண திட்டத்தை அறிவித்தவர் முதலமைச்சர். 14ஆவது ஊதிய ஒப்பந்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை வரும் 12ஆம் தேதி நடத்தப்படும் என்று தெரிவித்தார்.
தானியங்கி பயணச் சீட்டு வழங்கும் முறை, பணப் பரிவர்த்தனையற்ற பயணச் சீட்டு முறையினை அறிமுகப்படுத்துதல், பயணக் கட்டண சலுகை அனுமதி சீட்டுகளை வலைத்தளம் வாயிலாக வழங்குதல், சென்னை, திருச்சி மற்றும் விழுப்புரத்தில் உள்ள அரசு தானியங்கி பணிமனைகளை நவீனமயமாக்கல் மற்றும் தரம் உயர்த்துதல் என புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு கட்டணமில்லா பயணத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், இணையவழி பயணச்சீட்டு முன்பதிவு வாயிலாக பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு 10% கட்டண சலுகை வழங்கப்படும் என்றும் அறிவித்தார்.
மேலும், பேருந்து முனையங்களில் இணையவழி பயணியர் தகவல் ஏற்பாட்டு முறை செயல்படுத்தப்படும் எனவும், அனைத்து அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கும் ஒருங்கிணைந்த பயணிகள் குறைதீர்க்கும் உதவி மையம் உருவாக்கப்படும் எனவும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.