புதிய அவதாரம் எடுக்கும் ‘டைட்டானிக்’ ரோஸ்!

டைட்டானிக் படத்தில் ரோசாக நடித்த கேட் வின்ஸ்லெட் இயக்குநராக அறிமுகமாகிறார்.

பிரபல ஹாலிவுட் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கிய படம் தான் டைட்டானிக். இதில் கதாநாயகனாக டிகாப்ரியாவும், கதாநயகியாக கேட் வின்ஸ்லெட்டும் நடித்திருந்தனர். ஒரு கப்பலையும், காதலையும் மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இப்படம் உலகின் மிகச் சிறந்த ஒரு காதல் காவியமாக பார்க்கப்பட்டது. இப்படம் உலகம் முழுவதும் வசூலில் சாதனை படைத்ததோடு ரசிகர்களின் மனதையும் வென்றது.

இதில் ரோஸ் கதாப்பத்திரத்தில் நடித்த கேட் வின்ஸ்லெட் இப்படத்திற்க்கு பிறகு சினிமாத்துறையில் பெரிதாக வலம் வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சில வெற்றிப்படங்களை தாண்டி அவரால் உச்சம் தொடமுடியவில்லை.

இந்த நிலையில், கேட் வின்ஸ்லெட் ‘குட்பை ஜூன்’ என்கிற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். இப்படத்தை அவரே தயாரிக்கவும் செய்கிறார். டோனி கோலெட் , ஜானி ஃப்ளைன் உள்ளிட்ட பிரபலங்கள் நடிக்கும் இப்படத்தின் வெளியீட்டை எதிர்பார்த்து ரசிகர்கள் ஆவலோடு கார்த்திருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.