இந்த நாட்களில் அதிக வேலைகளை உருவாக்குபவர்களையே நாங்கள் விரும்புகிறோம்,
வேலை தேடுபவர்களை அல்ல என்று மத்திய கல்வி திறன் மேம்பாடு மற்றும் தொழில்
முனைவு அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
இன்று சென்னை அடையாறில் அமைந்துள்ள தோல் துறை லெதர் கிராஃப்ட் அமைப்பில்
மத்திய அரசின் மீன் வளம் கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை இணை அமைச்சர் எல்.முருகன் மற்றும் மத்திய கல்வி திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவு
அமைச்சர் தர்மேந்திர பிரதாப் இருவரும் திறன் மேம்பாட்டு திட்டங்களை ஆன்லைனில்
வழங்குவதற்கான தளத்தை வழங்கும் சான்றிதழ் ஸ்கேல் ஸ்டுடியோ ஆண்ட்ராய்டு செயலியை அறிமுகப்படுத்தினர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் எல்.முருகன் கூறுகையில், “பிரதமர் நரேந்திர மோடியின் கனவு திட்டமான made in india, Start up India போன்ற திட்டங்கள் பெரிய வளர்ச்சியை கண்டு உள்ளோம். 2027 இல் இந்தியா திறமை வாய்ந்த இளைஞர்கள் உள்ள நாடாக மாற வேண்டும். அதற்கு leather institute போன்ற இடங்களை பயன்படுத்தி கொள்வோம்” என்றார்.
அதன்பின் மேடையில் பேசிய மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதாப் கூறியதாவது:
சி.எல்.ஆர்.ஐ., நம் நாட்டில் உள்ள தனிச்சிறப்பு வாய்ந்த நிறுவனம். நீங்கள் PHD மாணவர்களை உருவாக்கி வருகிறீர்கள். மேலும் வெவ்வேறு வீடுகளுக்கு
திறமையான பயிற்சி அளிக்கிறீர்கள்.
இன்று நாம் தோல் துறையில் திறன் ஸ்டுடியோவை அர்ப்பணிக்கிறோம். நாகரீகம் மற்றும் சுற்றுச்சூழல் எந்த அளவிற்கு இருக்கிறதோ, அந்த அளவுக்கு தோல் தொழில் உள்ளது.
காலணி, கேரி பேக்குகள், ஆடைகள் போன்றவற்றில் நாம் பயன்படுத்தும் தோல் துறையின் பயன்பாடு நிரந்தரமானது.
சில ஐரோப்பிய நிறுவனங்கள் சுற்றுச்சூழல் நிறுவன தொழிற்சாலையான அதிநவீன
தொழில்நுட்ப நிறுவனங்களைக் கொண்டுள்ளன. இந்த நாட்களில் அதிக வேலைகளை உருவாக்குபவர்களையே நாங்கள் விரும்புகிறோம். வேலை தேடுபவர்களை அல்ல.
கைவினைஞர்களின் திறனையும் திறமையையும் அதிகரிக்கலாம். கற்றல் திறன்களை ஏற்கனவே உள்ளதைக் கொண்டு அங்கீகரிப்போம். எங்கள் NEP-யில் திறன் மற்றும் கைவினைக்கு முக்கியத்துவம் அளித்துள்ளோம். இன்று எங்களிடம் 4.2 மில்லியன் கைவினைஞர்கள் உள்ளனர் மற்றும் 6 மில்லி கைவினைஞர்களை இலக்காகக் கொண்டுள்ளோம்.
தோல் தொழிலை உங்கள் தொழிலாக மாற்றி, உங்கள் தயாரிப்புகளை இ-காமர்ஸ்
தளத்தில் வைக்கவும் என்றார் தர்மேந்திர பிரதான்.








