திருப்பூர் அருகே சமய நல்லுறவு இயக்கம் சார்பில் சிறப்பு மருத்துவ முகாம்!

திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தை அடுத்த புதுப்பாளையம் குடியிருப்பு பகுதியில் நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாமை சட்ட மன்ற உறுப்பினர் செல்வராஜ் துவக்கி வைத்தார். திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தை அடுத்த புதுப்பாளையம் குடியிருப்பு பகுதியில் பல…

திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தை அடுத்த புதுப்பாளையம் குடியிருப்பு பகுதியில் நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாமை சட்ட மன்ற உறுப்பினர் செல்வராஜ் துவக்கி வைத்தார்.

திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தை அடுத்த புதுப்பாளையம் குடியிருப்பு பகுதியில் பல சமய நல்லுறவு இயக்கத்தின் சார்பாக மூன்று நாட்கள் பொதுமக்களுக்கான இலவச ஹோமியோபதி சிறப்பு மருத்துவ முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த முகாமை திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ்,பல சமய நல்லுறவு இயக்க மாநில தலைவர் முகமது ரஃபீக் ஆகியோர் துவக்கி வைத்தனர். முகாமில் குழந்தைகள் பெரியவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டு பயன்பெற்றனர். இதில் சங்க மாவட்ட தலைவர் ஷாஷகான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

வேந்தன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.