இந்தியா சுதந்திரப் போராட்ட வீரர்களில் ஒருவர் திருப்பூர் குமரன். கொடி காத்த குமரன் என்று அழைக்கப்படும் இவர் ஆங்கிலேய காவல்துறையினர் நடத்திய தடியடியில் தேசியக் கொடியைக் காத்து 1932 ஆம் ஆண்டு ஜனவரி 11 ஆம் தேதி வீரமரணம் அடைந்தார். இன்று அவரது 94ஆவது நினைவுநாள் அனுசரிக்கப்பட்டுகிறது.
இந்த நிலையில் அதிமுக பொதுச்செயளாலர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “இந்திய விடுதலை போராட்டத்தில், பாரத அன்னையின் கைகளில் கட்டப்பட்டிருந்த அடிமை சங்கிலியை உடைத்தெறிந்தே தீருவேன் என்ற உயரிய லட்சியத்தோடு, ஆங்கிலேயே ஏகாதிபத்தியத்திற்கு எதிரான அறப்போராட்டத்தில் பங்கெடுத்து, தடியடியால் தாக்கப்பட்டு மண்ணில் சரிந்த போதும், தன் கையில் ஏந்தியிருந்த இந்தியத் தாயின் மணிக்கொடியை கீழே வீழாது காத்த “கொடிகாத்த குமரன்” அவர்களின் நினைவு நாளில் அவர்தம் தியாகத்தையும் தேசபக்தியையும் போற்றி வணங்குகிறேன்…!” என்று தெரிவித்துள்ளார்.







