திருப்பதி பிரம்மோற்சவ சாமி ஊர்வலத்தில் திடீரென்று மிரண்ட யானை யானையால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பதி மலையில் ஏழுமலையானின் நவராத்திரி பிரம்மோற்சவம் நடைபெற்று வருகிறது. பிரம்மோற்சவத்தை முன்னிட்டு காலை, இரவு ஆகிய வேலைகளில் திருப்பதி மலையில் உள்ள மாட வீதிகளில் சாமி ஊர்வலம் நடைபெறுகிறது.
சாமி ஊர்வலத்தின் முன் யானைகள், குதிரைகள், காளைகள் ஆகியவை அணிவகுத்துச்
செல்கின்றன. இந்த நிலையில் நேற்று இரவு ஹம்ச வாகன புறப்பாடு நடைபெற்ற போது ஊர்வலத்தின் முன்னாள் அணிவகுத்துச் சென்ற யானைகளில் ஒன்று திடீரென்று மிரண்டு பிளிறியது.
இதனால் அடுத்து என்ன நடக்குமோ என்ற அச்சம் அங்கு ஏற்பட்டது. இந்த நிலையில் தயாராக கொண்டுவரப்பட்டிருந்த கரும்பு, இலை தலைகள் ஆகியவற்றை யானைகளுக்குக் கொடுத்துச் சாந்தப்படுத்திய பகன்கள் மிரண்ட யானை உட்பட அனைத்து யானைகளையும் ஊர்வலத்திலிருந்து அழைத்துச் சென்றனர்.







