இதனால், கோயில் முன்புள்ள கடற்கரையில் அதிக அளவில் கடல் அரிப்பு ஏற்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. அதாவது, 20 அடி நீளத்திற்கு 10 அடி ஆழத்திற்கு கடலில் அரிப்பு ஏற்பட்டு, மிகப்பெரிய பள்ளம் உருவாகியுள்ளது. இந்த பள்ளத்தை கண்டு பக்தர்கள் அச்சமடைந்துள்ளனர். இதனால், பக்தர்கள் நீராடுவதில் சிரமம் ஏற்பட்டது. கற்கள் கொட்டுவதால் தான் அரிப்பு நடப்பதாக சமூக ஆர்வலார்கள் தெரிவித்தனர்.
திருச்செந்தூர் கடல் அரிப்பு- கனிமொழி எம்.பி., மற்றும் அமைச்சர்கள் ஆய்வு!
திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் கடல் அரிப்பு காண எம்.பி கனிமொழி, அமைச்சர்கள் சேகர்பாபு, மற்றும் அனிதா ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தனார்.
தூத்துக்குடி மாவட்டம், முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலுக்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர். இங்கு கடந்த சில நாட்களாகவே கடல் அலையின் சீற்றம் அதிகமாக காணப்படுகிறது. இந்த கடந்த 2 மாதங்களாக கடல் அரிப்பு உள்ளாதாக கூறினர்.
இந்நிலையில், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலை பார்வையிட எம்.பி கனிமொழி, அவருடன் அமைச்சர்கள் சேகர்பாபு, மற்றும் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் கோயில் கடற்கரைக்கு வந்தனர்.







