டைம்ஸ் நாளிதழின் ‘இந்த ஆண்டின் சிறந்த நபர்’ டெய்லர் ஸ்விஃப்ட்!

டைம்ஸ் நாளிதழ் ஆண்டு முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய நபர்களில் ஒருவரைத் தேர்வு செய்து அந்தாண்டுக்கான சிறந்த நபர் என்கிற பெயரை அறிவிக்கும். 2023-ம் ஆண்டுக்கான சிறந்த நபராகத் தேர்வு செய்யப்பட்டிருப்பவர், அமெரிக்காவை சேர்ந்த …

டைம்ஸ் நாளிதழ் ஆண்டு முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய நபர்களில் ஒருவரைத் தேர்வு செய்து அந்தாண்டுக்கான சிறந்த நபர் என்கிற பெயரை அறிவிக்கும்.

2023-ம் ஆண்டுக்கான சிறந்த நபராகத் தேர்வு செய்யப்பட்டிருப்பவர், அமெரிக்காவை சேர்ந்த  பாப் இசைக் கலைஞர் டெய்லர் ஸ்விஃப்ட்.  இது குறித்து டைம்ஸ் நாளிதழ், டெய்லரின் சாதனைகள்- கலாச்சார,  விமர்சன மற்றும் வணிகரீதியாக பட்டியலிடுவது இயலாத காரியம் எனக் குறிப்பிட்டுள்ளது.

இதையும் படியுங்கள் :ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வாரை பிடிக்கப்போவது உறுதி! – இஸ்ரேல் பிரதமர் பேச்சு

2023-ல் பல சமயங்களில் நாளிதழ்களில் தலைப்பு செய்தியில் அடிபடும் பெயராக டெய்லர் ஸ்விஃப்ட் இருந்துள்ளார். அக்டோபரில் வெளியான அவரது இசை நிகழ்ச்சிகள் திரைப்படம் ‘எராஸ் டூர்’ உலகம் முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்றது.

மேலும், டைம்ஸ் நாளிதழ்,  கடந்த ஆண்டு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை அந்தாண்டுக்கான நபராகத் தேர்வு செய்தது.  2021-ல் எலான் மஸ்க் தேர்வு செய்யப்பட்டார்.

அதனை தொடர்ந்து,  நபர்களுக்கு மட்டுமில்லாமல் குழு அல்லது பொருள் அல்லது கருத்துருக்களுக்கும்,  டைம்ஸின் அந்தாண்டுக்கான நபராக அறிவிக்கப்பட்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

https://twitter.com/TIME/status/1732379845047283996

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.