முக்கியச் செய்திகள் விளையாட்டு

பாலியல் புகார்: திடீரென பதவி விலகிய ஆஸி. டெஸ்ட் கேப்டன்!

பாலியல் புகாரை அடுத்து ஆஸ்திரேலிய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் டிம் பெய்ன் பதவி விலகியுள்ளார்.

தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி விளையாடியபோது பந்தை சேதப்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து அப்போதைய டெஸ்ட் கேப்டன் ஸ்மித் பதவி விலகினார். இதனால் புதிய டெஸ்ட் கேப்டனாக, டிம் பெய்ன் கடந்த 2018 ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டார். பெய்ன், கேப்டனாக நியமிக்கப்பட்ட போதே, பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்தார். தனக்கு பாலியல் தொடர்பான, குறுஞ்செய்திகளை அனுப்பியதாகக் கூறியிருந்தார். இந்நிலையில், டிம் பெய்ன் தனது பதவியை இப்போது ராஜினாமா செய்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இது கடினமான முடிவுதான். ஆனால் எனக்கும் என் குடும்பத்துக்கும், கிரிக்கெட்டுக்கும் இது சரியான முடிவு. நான்கு வருடங்களுக்கு முன், அப்போதைய சக பெண் ஊழியருக்கு குறுஞ்செய்தி அனுப்பினேன். அது தனிப்பட்ட பரிமாற்றம். விசாரணைக்கு வந்தது. அதில் வெளிப்படையாக பங்கேற்றேன். ஆனால், அப்போது கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் நடத்தை விதிகள் மீறப்படவில்லை என்று தெரியவந்தது. இந்த சம்பவத்துக்கு அழ்ந்த வருத்தம் தெரிவித்தேன். இப்போதும் தெரிவிக்கிறேன்.

என் மனைவி, குடும்பம் மற்றும் அந்தப் பெண்ணுக்கு நான் காயத்தை ஏற்படுத்தியதற்காக வருந்துகிறேன். நான் அனுப்பிய அந்த தனிப்பட்ட குறுஞ்செய்தி பொதுவெளியில் பகிரப்பட இருப்பதாக சமீபத்தில் அறிந்தேன். இதனால், கேப்டன் பதவியில் இருந்து உடனடியாக விலகுவது சரியான முடிவு என்று நம்புகிறேன். ஆஷஸ் தொடருக்கு முன் அணிக்கு விரும்பதாக இடையூறாக மாறுவதை நான் விரும்பவில்லை. ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக என் பங்களிப்பை நேசித்தேன். அணியை வழிநடத்தியதை என் விளையாட்டு வாழ்க்கையின் பாக்கியமாக கருதுகிறேன். சக வீரர்களின் ஆதரவுக்கு நன்றியுள்ளவனாக இருக்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.

Advertisement:
SHARE

Related posts

”சத்குருவை பின்பற்றுகிறேன்” – வில் ஸ்மித்

Janani

அழிவின் விளிம்பில் ஆப்பிரிக்க யானைகள்!

எல்.ரேணுகாதேவி

பகத்சிங் நாடகம்: தூக்குப் போடும் காட்சியில் நடித்தபோது சிறுவன் உயிரிழப்பு

Gayathri Venkatesan