டிக்டாக் பிரபலம் ரவுடி பேபி சூர்யா கைது செய்யப்பட்டுள்ளார்.
டிக்டாக் செயலியில் பிரபலமடைந்த ரவுடி பேபி என்று அழைக்கப்படும் சூர்யா சமீபத்தில் பல்வேறு புகார்களில் சிக்கியிருந்தார். ஆபசமாக பேசுதல், நடனம் என பல்வேறு சர்ச்சைகளில் அவர் சிக்கியிருந்தார். இந்நிலையில் கோவை பெரியநாயக்கன் பாளையம் பகுதியைச் சேர்ந்த இருவர் புகார் அளித்திருந்தனர்.
புகாரில் குழந்தைகளை தவறாக சித்தரித்து சமூகவளைதளங்களில் ஆபாசாமாக வெளியிட்டதாக குற்றம்சாட்டப்பட்டிருந்தது. இதனையடுத்து தகவல்தொழில்நுட்ப பிரிவு சட்டத்தின் கீழ் கோவை நுண்ணறிவு பிரிவு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.
இதனையடுத்து மதுரை திருநகரில் பதுங்கியிருந்த சூர்ய மற்றும் அவரது நண்பர் சிக்கான் ஆகியோரை கோவை மாவட்ட காவல்துறையினர் கைது செய்தனர். பின்னர் இருவரையும்
மருத்துவப்பரிசோதனைக்கு கோவை மாநகர சைபர் கிரைம் காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
சமீப நாட்களாக சமூக வலைத்தளங்களில் சூர்யா பல சர்ச்சைகளில் தொடர்ந்து சிக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.








