பூந்தமல்லி எஸ் பி சினிமாவில் லியோ திரைப்படம் சிறப்பு காட்சிக்கு டிக்கெட்
1500 ரூபாய்க்கு விற்கப்படுவதாக குற்றம் சாட்டும் விஜய் ரசிகர் ஒருவரின் ஆடியோவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் விஜய் நடிப்பில் லியோ திரைப்படம் 19ஆம்
தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் பூந்தமல்லியில் உள்ள
எஸ்பி சினிமாவில் சிறப்புக் காட்சியாக 18ஆம் தேதி மாலை மற்றும் இரவு
காட்சிகள் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்காக மாலைக் காட்சி 1500 இரவு காட்சி 1200 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது அதேபோல் திரைப்படம் வெளியாகும் என கூறப்பட்ட 19ஆம் தேதி 500 ரூபாய் டிக்கெட் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இதனை விஜய் ரசிகர்மன்ற நிர்வாகி சக ரசிகர்களுக்கு முன் பதிவு செய்ய அறிவுறுத்தி ஆடியோ வெளியிட்டுள்ளார்.
இது சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்டு வருகிறது. அரசு நிர்ணயிக்கப்பட்ட டிக்கெட் விலையைவிட 10 மடங்கு அதிகமாக டிக்கெட் விலை கூறப்பட்டுள்ளதால் பூந்தமல்லி வட்டாட்சியர் மற்றும் பூந்தமல்லி நகராட்சி நிர்வாகம் முறையாக கண்காணிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.







