34 C
Chennai
May 12, 2024
முக்கியச் செய்திகள் சினிமா

நவம்பர் 24ம் தேதி வெளியாகிறது ‘துருவ நட்சத்திரம்’ – படக்குழு அறிவிப்பு…!

‘துருவ நட்சத்திரம்’  திரைப்படம் வருகிற நவம்பர் 24-ஆம் தேதி வெளியாகும் என படக்குழு போஸ்டர் மற்றும் வீடியோவை வெளியிட்டு அறிவித்துள்ளது.

நீண்டகாலமாக அதாவது 2016-ம் ஆண்டிலிருந்து 7 வருடங்களாக தயாரிப்பில் இருந்து வருகிறது கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள துருவ நட்சத்திரம் படம். இந்த திரைப்படத்தில் நாயகனாக விக்ரம், ரிதுவர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ், ராதிகா, சிம்ரன், அர்ஜூன் தாஸ், உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளனர். இப்படத்தின் மூலம் விக்ரம் உடன் முதன்முதலாக கூட்டணி அமைத்தார் கெளதம்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்த திரைப்படம் 2018 ம் ஆண்டு மே மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் பல காரணங்களால் ஐந்து ஆண்டுகளாக திரைப்படம் வெளியாகாமல் இருந்தது. மேலும் நிதி நெருக்கடியால் வெளியாவதில் தாமதமானதாக கூறப்பட்டது. சமீபத்தில் படத்தின் பணிகள் மீண்டும் துவங்கப்பட்டதாக கூறப்பட்டது. கடந்த 6 மாதங்களுக்கு முன் படத்தின் இறுதிகட்டப்பணிகள் தொடங்கியதை படத்தின் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் உறுதிப்படுத்தினார்.

மேலும் பின்னணி இசை வேலைகள் தீவிரமாக நடைபெறுவதாகவும் அவர் கூறினார். இதனால் ரசிகர்களின் நீண்டநாள் காத்திருப்புக்கு பதில் கிடைத்தது. அதன்படி இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.

அநத வகையில், ஜூலை மாதம் துருவ நட்சத்திரம் திரைப்படத்தின் இரண்டாவது பாடலான “ஹிஸ் நேம் இஸ் ஜான்” பாடல் வெளியானது. இப்பாடலை லோகேஷ் கனகராஜ் வெளியிட்டுள்ளார்.

இந்த நிலையில், இப்படம் தீபாவளியை முன்னிட்டு வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. மேலும், ‘துருவ நட்சத்திரம்’ திரைப்படம் வருகிற நவம்பர் 24-ஆம் தேதி வெளியாகும் என படக்குழு போஸ்டர் மற்றும் வீடியோவை வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading