ராஜஸ்தானில் ராகுல் காந்தி!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூர் சென்ற காங்கிரஸ் எம்பி ராகுல் காந்திக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ராஜஸ்தானில் இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான முன்னேற்பாடு பணிகளில் ஆளும் கட்சியான காங்கிரஸ் மற்றும்…

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூர் சென்ற காங்கிரஸ் எம்பி ராகுல் காந்திக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

ராஜஸ்தானில் இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான முன்னேற்பாடு பணிகளில் ஆளும் கட்சியான காங்கிரஸ் மற்றும் பாஜக உள்ளிட்ட கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக ஜெய்ப்பூரின் மான்சரோவர் பகுதியில் புதிய மாநில காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்திற்கான அடிக்கல் நாட்டும் விழா இன்று நடைபெறுகிறது.
இந்த நிகழ்வில் பங்கேற்பதற்காக காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி ஜெய்பூர் சென்றார்.

அவருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட், காங்கிரஸ் கட்சி மாநில பொறுப்பாளர் சுக்ஜிந்தர் ரந்தாவா, மாநில தலைவர் கோவிந்த் சிங் தோடஸ்ரா மற்றும் முக்கிய நிர்வாகிகள் அவரை வரவேற்றனர்.

மாநில காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்திற்கான அடிக்கல் நாட்டும் திறந்து வைக்கும் ராகுல் காந்தி அங்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் சிறப்புரையாற்றுகிறார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.