“19 மாவட்டங்களில் இடியுடன் மழை பெய்யும்” -வானிலை ஆய்வு மையம் தலவல்

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் ஒருபுறம் கத்தரி வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், மறுபுறம் மிதமான மழை பெய்து…

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் ஒருபுறம் கத்தரி வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், மறுபுறம் மிதமான மழை பெய்து வெப்பத்தை தணித்து வருகிறது. இதற்கிடையே, தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

இந்த நிலையில் தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி ,திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கடலூர், சேலம், நாமக்கல், திண்டுக்கல், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், சிவகங்கை, தென்காசி, நெல்லை, குமரி ஆகிய 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.