சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 5 விக்கெட் இழப்பிற்கு 141 ரன்களை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி குவித்தது. எனவே சிஎஸ்கே அணிக்கு 142 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
2024 ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் 22-ம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் தொடங்கி பல்வேறு மைதானங்களில் நடைபெற்று வருகிறது. 61 லீக் போட்டிகள் முடிவடைந்த நிலையில் எந்த நான்கு அணிகள் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதிபெறும் என தீவிரமாக சென்றுகொண்டிருக்கிறது போட்டி.
இந்நிலையில் இன்று 61வது லீக் போட்டியில் முன்னாள் சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதி வருகின்றன. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 141 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக ரியான் பராக் 47 ரன்கள் எடுத்தார்.
இதன்மூலம் சென்னை அணிக்கு 142 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சென்னை சார்பில் அதிகபட்சமாக துஷார் தேஷ்பாண்டே இரண்டு விக்கெட்டுகளும், சிம்ரஜித் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இந்த போட்டியில் வென்றால் மட்டுமே சென்னை அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் என்பது குறிப்பிடதக்கது.







