3X3 கூடைப்பந்து போட்டி; சாம்பியன் பட்டம் வென்ற தமிழ்நாடு ஆடவர் அணி…

த்ரீ எக்ஸ் த்ரீ கூடைப்பந்து போட்டியில், சாம்பியன் பட்டம் வென்ற தமிழ்நாடு ஆடவர் மற்றும் கேரள மகளிர்அணிகளுக்கு, தலா மூன்று லட்ச ரூபாய் ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது. இந்தியாவிலேயே முதன்முறையாக, த்ரீ எக்ஸ் த்ரீ தேசியக்…

த்ரீ எக்ஸ் த்ரீ கூடைப்பந்து போட்டியில், சாம்பியன் பட்டம் வென்ற தமிழ்நாடு ஆடவர் மற்றும் கேரள மகளிர்அணிகளுக்கு, தலா மூன்று லட்ச ரூபாய் ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது.

இந்தியாவிலேயே முதன்முறையாக, த்ரீ எக்ஸ் த்ரீ தேசியக் கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டிகள், சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இம்மாதம் 22ம் தேதி தொடங்கியது. இந்தியக் கூடைப்பந்து சம்மேளனம் மற்றும் தமிழ்நாடு கூடைப்பந்து சங்கம் இணைந்து நடத்திய இந்த போட்டியில், ஆடவர் மற்றும் மகளிர் பிரிவில் மொத்தம் 56 அணிகள் பங்கேற்றன.

இதில் ஆடவர் அணியில் தமிழ்நாடு அணி 17க்கு 16 என்கிற கணக்கில் பஞ்சாப் அணியை வென்று சாம்பியன் பட்டம் பெற்றது. மகளிர் பிரிவில், டெல்லி அணியை 20க்கு 15 என்ற புள்ளிக்கணக்கில் கேரளா அணி வென்றது. முதலிடத்தைப் பிடித்த அணிகளுக்கு தலா மூன்று லட்ச ரூபாய் மற்றும் கோப்பையை இந்தியக் கூடைப்பந்து சம்மேளன தலைவர் ஆதவ் அர்ஜுனா, உயர்நீதிமன்ற நீதிபதி ராதாகிருஷ்ணன் பட், கரண்சிங், ஐ.ஆர்.எஸ் அதிகாரி செல்வகணேஷ், ஸ்காட் ஃபிளேமிங் பொது செயலாளர் குல்விந்தர் சிங் உள்ளிட்டோர் வழங்கினர்.

இந்தத் தொடரில் முதல் 7 இடங்களை பிடித்த அணிகள் வரும் அக்டோபர் 23ம் தேதி கோவாவில் நடைபெற உள்ள 37வது தேசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க உள்ளன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.