24 C
Chennai
December 4, 2023
முக்கியச் செய்திகள் தமிழகம்

வந்தே பாரத் ரயிலை கன்னியாகுமரி வரை நீட்டிக்க வேண்டும் -பிரதமருக்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம்

வந்தே பாரத் ரயில் சேவையை கன்னியாகுமரி வரை நீட்டிப்பு செய்ய முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இந்திய ரயில்வே சாா்பில் பல்வேறு வசதிகளை உள்ளடக்கிய அதிநவீன வந்தே பாரத் ரயில்கள் அறிமுகம் செய்யப்பட்டு நாட்டின் முக்கிய நகரங்களுக்கு இயக்கப் பட்டு வருகின்றன.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

தமிழகத்தில் சென்னை-மைசூரு, சென்னை- கோவை இடையே வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில், தமிழ்நாட்டில் திருநெல்வேலி-சென்னை இடையிலான வந்தே பாரத் விரைவு ரயில் சேவை, ராஜஸ்தான், தெலங்கானா, ஆந்திரா, கர்நாடகம், பிகார், மேற்கு வங்கம், கேரளம், ஒடிசா, ஜார்கண்ட் மற்றும் குஜராத் ஆகிய 11 மாநிலங்களில் சேவையை மேம்படுத்தும் வகையில், 9 வந்தே பாரத் விரைவு ரயில்களை பிரதமர் நரேந்திர மோடி நேற்று காணொலிக் காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

இந்நிலையில்,  வந்தே பாரத் ரயில் சேவையை கன்னியாகுமரி வரை நீட்டிப்பு செய்ய முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக  அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், “நெல்லை – சென்னை வந்தே பாரத் ரயில் திட்டம் தொடங்கப்பட்டதற்காக மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த ரயில் சேவையால், நெல்லையில் இருந்து சென்னைக்கான பயண நேரத்தை 12 மணி நேரத்திலிருந்து 8 மணி நேரமாகக் குறைத்துள்ளது. இந்தச் சேவையை தமிழகத்தின் தென் கடைக்கோடி மாவட்டமான கன்னியாகுமரி வரை நீட்டிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” என்று கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy