விவசாயிகளுக்கான மும்முனை மின்சாரம் வழங்கும் நேரம் அறிவிப்பு

விவசாயிகளுக்கான 12 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்கப்படும் நேரம் குறித்து சுற்றறிக்கையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. டெல்டா மாவட்டங்களில் ஒவ்வொரு துணை மின் நிலையத்திலும் இரண்டு (குரூப் 1, குரூப் 2 )…

விவசாயிகளுக்கான 12 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்கப்படும் நேரம் குறித்து சுற்றறிக்கையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

டெல்டா மாவட்டங்களில் ஒவ்வொரு துணை மின் நிலையத்திலும் இரண்டு (குரூப் 1, குரூப் 2 ) பிரிவுகள் பிரிக்கப்பட்டு மும்முனை மின்சாரம் வழங்கப்பட உள்ளது. டெல்டா பகுதிகளில் குரூப் 1, குரூப் 2  இரண்டு பகுதிகளுக்கும் காலை நேரத்தில் 8.30 மணியிலிருந்து 2.30 மணி வரை 6 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்கப்படும்.

மேலும், டெல்டா மாவட்டங்களில் இரவு நேரத்தில் குரூப் 1 பகுதிக்கு  நள்ளிரவு 12 மணி முதல் காலை ஆறு மணி வரையிலும், குரூப் 2 பகுதிக்கு இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரையிலும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும்.

இதையும் படிக்க: நீட் தேர்வு – இன்று முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்

டெல்டா அல்லாத மாவட்டங்களில் ஒவ்வொரு துணைமின் நிலையத்திலும்
குரூப் 1 பகுதிக்கு காலை 9 மணியில் இருந்து 3 மணி வரைக்கும், இரவு நேரத்தில் 10 மணியில் இருந்து அதிகாலை 4 மணி வரைக்கும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும்

டெல்டா அல்லாத மாவட்டங்களில் குரூப் 2 பகுதிக்கு காலை  9:30 மணியில் இருந்து ம‌திய‌ம்  3.30  மணி வரைக்கும், இரவு நேரத்தில் 10 மணி முதல் விடியற்காலை 4 மணி வரைக்கும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.