“அன்புமணி ஆதரவு எம்.எல்.ஏக்கள் 3 பேர் பாமகவில் இருந்து நீக்கம்” – ராமதாஸ் தரப்பு அறிவிப்பு

அன்புமணி ஆதரவு எம்.எல்.ஏக்கள் மூன்று பேரை பாமகவில் இருந்து நீக்கியுள்ளதாக ராமதாஸ் தரப்பு அறிவித்துள்ளது.

பாமகவில் மக்களவைத் தேர்தல் கூட்டணி தொடர்பாகவும், 2026 சட்டமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாகவும் தந்தை மகன் இடையே மோதல் வெடித்தது. அப்போது ஏற்பட்ட மோதல் சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் தற்போது உச்சத்தை சந்தித்திருக்கிறது. இதற்கிடையே, தேர்தல் ஆணையம், நீதிமன்றம் ஆகியவை அன்புமணியை பாமகவின் தலைவராகவும் கட்சியின், சின்னம், பெயர், கொடி உள்ளிட்டவை அவருக்குத்தான் சொந்தம் என அங்கீகரித்ததாக சொல்லப்படுகிறது.

ஆனால், ராமதாஸ் இதனை மறுத்து வருகிறார். இரு தரப்பும் மாறி மாறி எதிர் தரப்பினரை நீக்கி வருகிறார்கள். அந்த வகையில், அன்புமணி ஆதரவாளர்களான 3 எம்.எல்.ஏக்களை பாமகவில் இருந்து நீக்குவதாக ராமதாஸ் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து பாமக பொதுச்செயலாளர் முரளி சங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,

“கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட சட்டமன்ற உறுப்பினர்களிடம் பாட்டாளி மக்கள் கட்சியினுடைய ஒழுங்கு நடவடிக்கை குழுவின் மூலம் விளக்கம் கேட்டு 72 அனுப்பப்பட்ட கடிதத்திற்கு இதுவரை பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மற்றும் தலைவர் மருத்துவர் ராமதாஸிடம் நேரிலோ, தொலைபேசியிலோ அல்லது கடிதம் மூலமாகவோ எந்தவித பதிாம் அளிக்காமல் தொடர்ந்து கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதால், மயிலம் சட்டமன்ற உறுப்பினர் சிவக்குமார், மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சதாசிவம், தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்பி வெங்கடேஸ்வரன் ஆகிய மூவரும் கட்சியின் நற்பெயருக்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதால் தற்காலிக நீக்கம் செய்யப்பட்டிருந்த அவர்கள் முவரும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பதவிகளில் இருந்தும் இன்று 12.012026 முதல் முழுமையாக நீக்கப்படுகிறார்கள் பாட்டாளி மக்கள் கட்சியினர் யாரும் மேற்கண்ட மூவரிடம் எந்தவித கட்சித் தொடர்பும் வைத்துக்கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்”

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.