சமுத்திரக்கனி, வசுந்தரா நடிப்பில் ஜெய்பிரகாஷ் ராதாகிருஷ்ணன் இயக்கத்தில் வெளிவந்துள்ள தலைக்கூத்தல் திரைப்படம் எப்படி உள்ளது என்பதை இந்த தொகுப்பில் பார்ப்போம்.
உடம்புக்கு முடியாமல் படுத்தப்படுக்கையாக இருக்கும் முதியவர்களை விளக்கெண்ணெய்யைத் தலையில் தடவி இளநீரைக் குடிக்க வைத்து கருணை கொலை செய்யும் தலைக்கூத்தல் முறையைக் கதைக்களமாகக் கொண்டுள்ளது இந்த படம். இப்படத்தில் சமுத்திரக்கனி, வசுந்தரா, கதிர், கலைச்செல்வன், ஆடுகளம் முருகதாஸ், வையாபுரி, வங்காள நடிகை கத நந்தியும் நடித்துள்ளனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
சமுத்திரக்கனியின் தந்தை உடம்புக்கு முடியாமல் படுத்தப்படுக்கையாக இருக்கிறார். தந்தையைக் கவனிப்பதற்காக வெளி மாவட்டங்களில் வேலைக்குச் செல்லாமல் தனது கிராமத்திலேயே Security வேலை செய்கிறார் சமுத்திரக்கனி. இதனால் வீட்டில் கடன் ஏற்படுகிறது. ஒரு கட்டத்தில் வீட்டு பத்திரத்தை அடைமானம் வைக்கிறார். இந்த விசயம் மனைவி வசுந்திராவின் காதிற்குப் போக சமுத்திரக்கனியிடம் வாக்குவாதம் செய்கிறார். தலைக்கூத்தல் முறையைச் செய்ய வசுந்திரா மற்றும் அவரது குடும்பத்தினர் சமுத்திரக்கனியிடம் கேட்கின்றனர். உயிருக்குப் போராடும் தந்தையை கருணைக்கொலையிலிருந்து காப்பாற்றுவாரா சமுத்திரக்கனி என்பது தான் கதை.
இதற்கு இடையில் படுத்தப்படுக்கையாக இருக்கும் சமுத்திரக்கனியின் தந்தைக்குப் பழைய காதல் நினைவுகள் வருகிறது. முதியவரின் இளம் வயது நடிகராகக் கதிர் நடித்துள்ளார். கதிருக்குக் காதலியாக வங்காள நடிகை கத நந்தி நடித்துள்ளார். இவர்களின் காதல் அனைவரையும் ரசிக்க வைக்கிறது. சாதி கொடுமையால் இருவரையும் அடித்து ஊர்மக்கள் பிரிக்கின்றனர். பிரியும் காதலர்கள் ஒன்று சேர்கிறார்களா என்பது கதையில் மிஸ்ஸிங். மிஸ் ஆனால் காட்சிகளால் சமுத்திரக்கனியின் தாயார் யார் என்ற கேள்வி தோன்றுகிறது. ஆடுகளம் முருகதாஸ் கதாபாத்திரம் திடீரென்று காணாமல் போகும் அந்த கதாபாத்திரம் என்ன சொல்ல வருகிறது என்பத தெரியவில்லை.
தலைக்கூத்தல் படத்திற்கு கேமரா, இசை பக்கபலம். கோவில்பட்டியை கண்முன் நிறுத்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர். தேவையான இடங்களில் அருமையான இசை தன்மையைக் காண்பித்து ரசனையைக் கூட்டுகிறார் இசையமைப்பாளர். இப்படி ஒரு நிலை நம் வீட்டு முதியவர்களுக்கு வந்தால் என்ன செய்திருப்போம் என்ற எண்ணினாலும், சில இடங்களில் இந்த கதாபாத்திரம் மூலம் என்ன சொல்ல வருகிறார் என்ற கேள்வி இயக்குநர் ஜெயபிரகாஷிடம் கேட்கத் தோன்றுகிறது. கதைக்களம் நம்மை சிந்திக்க வைத்தாலும் இழுபறி இல்லாமல் சொல்ல வேண்டியதைச் சீக்கிரம் சொல்லி இருந்திருக்கலாம்.
-சுஷ்மா சுரேஷ்