திமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் பிப்.17 முதல் விருப்ப மனு தாக்கல்!

சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விரும்புவோர், அதற்கான விண்ணப்பத்தை வரும் 17ம் தேதியில் இருந்து 24ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று அக்கட்சி அறிவித்துள்ளது. இது தொடர்பாக திமுக பொதுச் செயலாளர்…

சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விரும்புவோர், அதற்கான விண்ணப்பத்தை வரும் 17ம் தேதியில் இருந்து 24ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று அக்கட்சி அறிவித்துள்ளது.

இது தொடர்பாக திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், விருப்பமனு தாக்கல் செய்வதற்கான விண்ணப்ப படிவத்தை ஆயிரம் ரூபாய் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநில சட்டப்பேரவை தொகுதிகளுக்கு போட்டியிடுவோருக்கான விண்ணப்ப கட்டணமாக 25 ஆயிரம் ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரத்தில், மகளிர் மற்றும் தனித் தொகுதி வேட்பாளர்களுக்கான விண்ணப்ப கட்டணம் 15 ஆயிரம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் திமுக அறிவித்துள்ளது. விண்ணப்பித்த தொகுதி, கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்படுமானால், விண்ணப்ப கட்டணம் திருப்பி தரப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply