முக்கியச் செய்திகள் தமிழகம்

வரியை செலுத்தாமல் கோயில் நிலத்தை வைத்திருப்பவர்கள் வௌவாலாக பிறப்பார்கள்

கோயிலுக்கு உரிய வரியை செலுத்தாமல் கோயில் நிலங்களை வைத்திருப்பவர்கள், அடுத்த பிறவியில் வெளவாலாக பிறப்பார்கள் என்று மதுரை ஆதீனம் தெரிவித்துள்ளார்.

கும்பகோணம் அருகே திருப்புறம்பியம் கிராமத்தில் உள்ள சாட்சி நாத சுவாமி ஆலயத்திற்கு மதுரை ஆதினம் ஹரிஹர தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் வருகை புரிந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர்,

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்


உக்ரைன் ராணுவத்தை கொண்டுதான் இலங்கையில் உள்ள தமிழர்கள் கொல்லப்பட்டார்கள் என்று சுட்டிக்காட்டினார். இலங்கை தமிழர்களை கொன்று குவித்த உக்ரைன் நாட்டின் மீது தற்போது போர் நடைபெற்று வருவதாகக் குறிப்பிட்டார். தமிழர்களை அழித்த நபர்கள் நன்றாக இருக்க மாட்டார்கள் என்றும் கூறினார்.

தமிழ்நாட்டு மாணவர்கள் நமது மாநிலத்திலேயே கல்வி கற்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். அரசு மதுபான கடைகளை மூடவேண்டும் என்று வலியுறுத்தினார். ஆளுங்கட்சியினர் ,எதிர்க்கட்சியினர் வசம் உள்ள கோயில் நிலங்களை மீட்க வேண்டும் என்றும் மதுரை ஆதீனம் கேட்டுக் கொண்டார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

2018 கால்பந்து உலகக் கோப்பையில் கதாநாயகனாக மாறிய குரோஷிய கேப்டன்

Jayakarthi

பெண் உதவி ஆய்வாளருக்கு, சக காவலர்கள் நடத்திய வளைகாப்பு நிகழ்ச்சி

Web Editor

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அபார வெற்றி

Arivazhagan Chinnasamy