பண மோசடியில் ஈடுபட்டவர் 7 ஆண்டுகள் கழித்து கைது

சென்னையில் தனியார் விளம்பர நிறுவனம் மூலம் 75 லட்ச ரூபாய் மோசடி செய்து 7 ஆண்டுகள் தலைமறைவாக இருந்தவரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை செனாய் நகர் பகுதியில் கஜலட்சுமி என்பவர்…

சென்னையில் தனியார் விளம்பர நிறுவனம் மூலம் 75 லட்ச ரூபாய் மோசடி செய்து 7 ஆண்டுகள் தலைமறைவாக இருந்தவரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை செனாய் நகர் பகுதியில் கஜலட்சுமி என்பவர் தனியார் விளம்பர நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது நிறுவனம் மூலம் கோபல் ஐயர் என்பவரினால் அறிமுகமான பஞ்சாப்பை சேர்ந்த சஞ்சய் குமார் ஷர்மா மற்றும் சிவாஜி பட்கர் ஆகியோர், தங்களது நிறுவனத்திற்கு விளம்பரம் செய்துள்ளனர்.

2014 முதல் 2015ஆம் ஆண்டு வரை 75 லட்சம் ரூபாய்க்கு விளம்பரம் செய்த நிலையில் சஞ்சய் குமார் ஷர்மா மற்றும் சிவாஜி பட்கர் ஆகியோர் பணத்தை தராமல் தலைமறைவானதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கஜலட்சுமி புகார் அளித்த நிலையில் 7 ஆண்டுகளாக குற்றவாளிகளை தேடிய போலீசார், பஞ்சாப் மாநிலம் லூதியானா அருகே உள்ள ஃபெரோஸ் காந்தி மார்க்கெட் பகுதியில் சஞ்சய் குமார் ஷர்மாவை கைது செய்துள்ளனர்.

மேலும் தலைமறைவாக உள்ள மற்ற 2 குற்றவாளிகள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 7 ஆண்டுகள் கழித்து குற்றவாளிகளை கைது செய்திருப்பதால் இதே போன்ற குற்றத்தில் வேறெங்கும் ஈடுபட்டிருக்கிறார்களா என்ற கோணத்திலும் போலீஸார் விசாரணை செய்து வருகிறார்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.