தமிழ் சினிமாவில் இந்த வாரம் மட்டும் 12 படங்கள் வெளியாக உள்ளது.
கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த மாதம் 3 ஆம் தேதி வெளியான விக்ரம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று தற்போதுவரை திரையரங்குகளில் ஓடிக்கொண்டுள்ளது. விக்ரம் திரைப்படம் ஓடிடியில் ஜீலை 8 ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் ஆர் ஜே பாலாஜி நடித்த வீட்டுல விசேஷம், மாதவன் நடித்த ராக்கெட்ரி – நம்பி விளைவு, அருண் விஜய்யின் யானை, அருள்நிதியின் டி பிளாக் உள்ளிட்ட சில படங்கள் கடந்த வாரங்களில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த வாரம் ஜீன் 7, 8 ஆம் தேதிகளில் மட்டும் 12 திரைப்படங்கள் வெளியாக உள்ளது. பெரும்பாலும் சிறிய பட்ஜெட் படங்கள் தான் வெளியாக உள்ளது. ஒருசில டப்பிங் படங்களும் அந்த நாட்களில் வெளியாக உள்ளது. அந்த படங்களின் பட்டியலை தற்போது பார்க்கலாம்..
யோகிபாபு நடிப்பில் உருவாகியுள்ள பன்னிக்குட்டி, ஜெய் நடித்துள்ள எண்ணித்துணிக, சோனியா அகர்வால் நடித்துள்ள கிராண்மா, பிருத்விராஜ் நடித்துள்ள கடுவா ( டப்பிங் ), படைப்பாளன், ஃபாரின் சரக்கு , தோர் ( டப்பிங் ), வாட்ச், நாதிரு தின்னா, பெஸ்டி, ஒற்று, கிச்சு கிச்சு என மொத்தம் 12 திரைப்படங்கள் வெளியாக உள்ளன.
– தினேஷ் உதய்










