22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.70 குறைந்து ரூ.6,400-ஆக விற்பனையாகிறது.
மத்திய பட்ஜெட்டில் தங்கம் மற்றும் வெள்ளிக் கட்டிகள் மீதான சுங்க வரி 15 சதவிகிதத்தில் இருந்து 6 சதவிகிதமாகவும் குறைக்கப்பட்டதை தொடர்ந்து தங்கம் விலை சரிந்து வந்தது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 3000க்கும் மேல் தங்கம் விலை குறைந்து வந்தது.
பின்னர் மீண்டும் உயர தொடங்கியது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், நேற்று தங்கம் உயர்ந்த விலையில் இன்று விலை குறைந்துள்ளது. நேற்றைய நிலவரப்படி சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.51,760-க்கு விற்பனையானது. அதேபோல், தங்கம் கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ரூ.6,470-க்கு விற்பனையானது.




