புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அடுத்த திருநள்ளாறில் உலக பிரசித்தி பெற்ற ஸ்ரீ தர்ப்பாரண்யேஸ்வரர் கோயில் உள்ளது. இந்த சனிபகவான் ஆலயத்தில் பங்குனி மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு பைரவருக்கு சிறப்பு அபிஷேக மற்றும் தீபாராதனை நடைபெறுவது வழக்கம்.
இந்த நிலையில் பைரவருக்கு பங்குனி மாத தேய்பிறை அஷ்டமி தினத்தை முன்னிட்ட சிறப்பு அபிஷேக மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. அதற்கு முன்பாக பல்வேறு திரவிய பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
தொடர்ந்து பல வண்ண மலர்களால் அலங்காரம் செய்து ஸ்ரீபைரவருக்கு சகஸ்ரநாம அர்ச்சனையும் மகா தீபாராதனையும் நடைபெற்றது. தேய்பிறை அஷ்டமி பூஜையில் ஏராளமான பக்தர்கள் ஸ்ரீபைரவரை தரிசித்து
அருள் பெற்றனர்.








