அந்தமான், நிக்கோபார் தீவுகளில் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், திருச்செந்தூரில் 2-வது நாளாக கடல் உள்வாங்கியதால், பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
அந்தமான், நிக்கோபார் தீவுகளில் நேற்று அடுத்தடுத்து நான்கு முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்நிலையில் புகழ்பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கடல் பகுதி நேற்று காலை 9 மணியளவில் சுமார் 200 அடி உள்வாங்கியது. பின்னர் மதியம் 1 மணி அளவில் கடல் இயல்பு நிலை திரும்பியது.
இந்தநிலையில், 2-வது நாளாக இன்றும் கடல் சுமார் 50 அடி உள்வாங்கி காட்சி அளித்தது. இதனால் கடல் பாறைகள் வெளியே தெரிந்தன. இந்நிலையில் அமாவாசை, பௌர்ணமி தினங்களில் திருச்செந்தூர் கடல் பகுதி உள்வாங்குவதும், இயல்பு நிலை திரும்புவது வழக்கமாக இருந்து வந்தது. இதை அடுத்து தொடர்ந்து இரண்டாவது நாளாக கடல் உள்வாங்கியதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதற்கிடையே வங்க கடலில் நான்கு முறை ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் சுனாமி எச்சரிக்கை ஏதும் இல்லை என புவியியல் மையம் தெரிவித்திருக்கிறது.
—கோ. சிவசங்கரன்







