சித்திரை அமாவாசையை முன்னிட்டு திருச்செந்தூரில் குவிந்த பக்தர்கள்!

உலகப்புகழ்பெற்ற திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசாமி திருக்கோயிலில் அமாவாசை தினத்தை முன்னிட்டு பக்தர்கள் குவிந்தனர். முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான உலக புகழ்பெற்ற திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசாமி திருக்கோயிலில் இன்று சித்திரை அமாவாசை தினத்தை முன்னிட்டு…

உலகப்புகழ்பெற்ற திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசாமி திருக்கோயிலில் அமாவாசை தினத்தை முன்னிட்டு பக்தர்கள் குவிந்தனர்.

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான உலக புகழ்பெற்ற திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசாமி திருக்கோயிலில் இன்று சித்திரை அமாவாசை தினத்தை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

கோயிலுக்கு வருகை‌ தர கூடிய பக்தர்கள் அனைவரும் கடலில் புனித நீராடிய பின்பு நாழிக்கிணறு புன்னிய தீர்த்தத்தில் புனித நீராடிய பின்னர் தான் கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். இந்த நிலையில் தற்போது தனியார் பங்களிப்புடன் ரூ.300 கோடியில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

கோயில் மண்டபங்கள், கடைகள், இடித்து அகற்றப்பட்டதுடன் நாழி கிணற்றுக்கு பக்தர்கள் செல்லக்கூடிய மேற்கூறையுடன் இருந்த நடைபாதைகளும் அகற்றப்பட்டுள்ளன. இதன் காரணமாக சுட்டெரிக்கும் கோடை வெயிலில் கையில் கைக் குழந்தைகளுடன்
நாழிக்கிணற்றில் புனித நீராட காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

—- சே. அறிவுச்செல்வன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.