புதிய ஸ்மார்ட்போன் வாங்கும் முன் கவனத்தில் கொள்ள வேண்டியவை என்ன?

மொபைல் போன் வாங்கும் போது என்னென்ன விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும் என்பதை விவரிக்கிறது இந்தச் செய்தித் தொகுப்பு. இந்திய மொபைல் சந்தையில் எண்ணற்ற ஸ்மார்ட்போன்கள் உள்ளன. ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் சந்தையில் ரூ.5000 முதல்…

மொபைல் போன் வாங்கும் போது என்னென்ன விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும் என்பதை விவரிக்கிறது இந்தச் செய்தித் தொகுப்பு.

இந்திய மொபைல் சந்தையில் எண்ணற்ற ஸ்மார்ட்போன்கள் உள்ளன. ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் சந்தையில் ரூ.5000 முதல் ரூ.1 லட்சம் ரூபாய்க்கும் மேல் கிடைக்கின்றன. இப்படி இருக்க, மொபைல் போன் வாங்கும் போது என்னென்ன விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும் என்பதனை பார்க்கலாம்.

பட்ஜெட்டை தீர்மானித்தல்:

புதிய மொபைல் யோசனை மனதில் தோன்றினால், முதலில் உங்கள் பட்ஜெட் எவ்வளவு என்று சிந்தியுங்கள். உண்மையில், மக்கள் பெரும்பாலும் தங்கள் பட்ஜெட்டை விட அதிகமான தொலைப்பேசிகளை வாங்குகிறார்கள், பின்னர் அதன் தவணைகளைச் செலுத்துவதில் வருத்தப்படுகிறார்கள்.

அண்மைச் செய்தி: ‘“வெந்து தணிந்தது காடு” திரைப்படத்தின் 2வது பாடல் ஆகஸ்ட் 14ல் வெளியாகிறது!’

தேவையைப் புரிந்து கொள்ளுதல்:

எந்த ஒரு ஸ்மார்ட்போன் வாங்கும் முன், அந்த விலையுயர்ந்த போன் உங்கள் தேவையைப் பூர்த்தி செய்கிறதா, அல்லது அதில் உங்கள் பயன்பாட்டில் இல்லாத பல வசதிகள் உள்ளதா என யோசியுங்கள். பலர் நெட்ஃபிக்ஸ் மற்றும் உயர்தர திரைப்படங்களை போனில் பார்க்காவிட்டாலும், HDR 10 ஆதரவு திரை கொண்ட போனை எடுப்பது போல.

கேமிங் போன் தேர்வு?:

இந்தியாவில் உள்ள பெரும்பாலான இளைஞர்கள் போனில் கேம்களை விளையாடுகிறார்கள், மேலும் சில வயதானவர்களும் PUBG போன்ற போர்க்களத்தை அனுபவிக்கிறார்கள், கேமிங் போன் அவர்களுக்கு ஒரு நல்ல தேர்வாக இருக்கும், ஆனால் கேமிங் செய்பவர்களுக்கு. மற்றவர்களுக்கு அல்ல, அவர்கள் கேமிங் போன்களை எடுப்பதைத் தவிர்க்க வேண்டும்.

பாதுகாப்பு அம்சங்கள்:

நீங்கள் பேனில் வங்கி போன்றவற்றையும் பயன்படுத்தினால், பேனில் இருக்கும் பாதுகாப்பு அம்சங்களையும் ஆராயலாம். இதில் கைரேகை ஸ்கேனர், ஐரிஷ் ஸ்கேனர், ஃபேஸ் லாக் போன்ற அம்சங்கள் உள்ளன என்பதனை. இதுபோன்ற அம்சங்களை நினைவு கூர்ந்து, நம் தேவையின் அடிப்படையில் புதிய ஸ்மார்ட்போனை வாங்கலாம்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.