ராஜராஜ சோழன் காலத்தில் இந்து மதம் இல்லை – கமல்ஹாசன்

ராஜராஜ சோழன் காலத்தில் இந்து மதம் இல்லை என நடிகர் கமலஹாசன் பொன்னியின் செல்வன் திரைப்படத்தைப் பார்த்துவிட்டு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். உலகம் முழுவதும் பொன்னியின் செல்வன் முதல் பாகத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ள…

ராஜராஜ சோழன் காலத்தில் இந்து மதம் இல்லை என நடிகர் கமலஹாசன் பொன்னியின் செல்வன் திரைப்படத்தைப் பார்த்துவிட்டு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

உலகம் முழுவதும் பொன்னியின் செல்வன் முதல் பாகத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில் பெரும்பாலான திரையரங்குகளில் இரண்டு வாரங்களுக்கான முன் பதிவு ஏற்கனவே நிறைவு பெற்றது.

மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் பொன்னியின் செல்வன் முதல் பாகம் திரைப்படம் செப் 30 ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடம் நேர்மறையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. ரூ.500 கோடி பட்ஜெட்டில் மிகப் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இந்த படம் முதல் நாள் மட்டும் உலகம் முழுவதும் 80 கோடி வசூல் செய்ததாக லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்நிலையில் பீனிக்ஸ் மாலில் உள்ள திரையரங்கில் நடிகர் கார்த்தி நடிகர் விக்ரம் மற்றும் கமல நடிகர் கமலஹாசன் ஆகிய மூன்று பேரும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தைப் பார்த்துவிட்டு செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

அப்போது பேசிய நடிகர் கமல்ஹாசன், “ராஜராஜ சோழன் காலத்தில் இந்து மதம் இல்லை. அப்போது சைவம், வைணவம் மட்டுமே இருந்தது. இந்து என்பது வெள்ளைக்காரன் வைத்த பெயர். மொழி அரசியலை திரைத்துறையிலாவது இல்லாமல் செய்ய வேண்டும்” எனப் பேசினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.