பன்வாரிலால் புரோஹித் குற்றச்சாட்டில் உண்மையில்லை: அதிமுக விளக்கம்

துணைவேந்தர் நியமனம் தொடர்பாக பன்வாரிலால் புரோஹித் கூறிய குற்றச்சாட்டில் உண்மையில்லை என, முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் நியூஸ் 7 தமிழுக்கு விளக்கம் அளித்துள்ளார். தமிழ்நாட்டின் முன்னாள் ஆளுநர் பன்வாரிலால் புரோகித், 2017 முதல் 2021…

துணைவேந்தர் நியமனம் தொடர்பாக பன்வாரிலால் புரோஹித் கூறிய குற்றச்சாட்டில் உண்மையில்லை என, முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் நியூஸ் 7 தமிழுக்கு விளக்கம் அளித்துள்ளார்.

தமிழ்நாட்டின் முன்னாள் ஆளுநர் பன்வாரிலால் புரோகித், 2017 முதல் 2021 வரை தமிழக ஆளுநராக பொறுப்பு வகித்தார். அந்த சமயத்தின் அவரின் துணை வேந்தர் நியமனங்கள் சர்ச்சைகளை உண்டாக்கின. இந்த நிலையில் தற்போது பஞ்சாப் ஆளுநராக பொறுப்பு வகித்து வருகிறார். நேற்று செய்தியாளர்களிடம் பேசிய பன்வாரிலால் புரோஹித், தமிழ்நாட்டில் துணைவேந்தர் பதவி 40 முதல் 50 கோடி ரூபாய் வரை விற்கப்படும் சூழல் இருந்ததாக தெரிவித்து இருந்தார்.

அந்த சமயத்தில் தமிழ்நாட்டில் ஆளும் கட்சியாக எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக இருந்து வந்தது. இந்தக் கருத்து தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதுகுறித்து முன்னாள் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், நியூஸ் 7 தமிழுக்கு தொலைபேசி வாயிலாக விளக்கம் அளித்துள்ளார்.

துணைவேந்தர் நியமனம் தொடர்பாக பன்வாரிலால் புரோஹித் கூறிய குற்றச்சாட்டில் உண்மையில்லை எனவும், முறைகேடு நடந்திருந்தால் அதற்கு ஆளுநரே பொறுப்பு எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், துணைவேந்தர் நியமனம் பற்றி 2019 பன்வாரிலால் பேசியபோதே எதிர்ப்பு தெரிவித்ததாக கூறிய கே.பி.அன்பழகன், இதற்கும் அப்போதைய முதலமைச்சருக்கு எந்த தொடர்பும் கிடையாது எனவும் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.