கடும் பனிப்பொழிவு: கருகி உதிரும் மா பூக்கள்

கிருஷ்ணகிரி அருகே கடும் பனி மற்றும் பூச்சி தாக்குதல் காரணமாக மா பூக்கள் கருகி உதிர்வதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். மாக்கென தனி பெயர் பெற்ற கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 44 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவு…

கிருஷ்ணகிரி அருகே கடும் பனி மற்றும் பூச்சி தாக்குதல் காரணமாக மா பூக்கள் கருகி உதிர்வதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

மாக்கென தனி பெயர் பெற்ற கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 44 ஆயிரம் ஹெக்டர்
பரப்பளவு வரை மா சாகுபடி செய்யப்படுகிறது. இந்த ஆண்டு பருவநிலை மாற்றம்
காரணத்தால் காலம் மாறி மா பூக்கள் பூத்து வருகின்றன.

இதன்காரணமாக பூச்சிகளின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனை கட்டுப்படுத்த பல மருந்துகள் பயன்படுத்தியும் கட்டுப்படுத்த முடியவில்லை. இந்த பூச்சி தாக்குதலினால், பூவில் இருக்கும் நீர்ச்சத்தை உருஞ்சபட்டு பூக்கள் கருகி உதிர்கிறது.

இதில் மிஞ்சும் ஒருசில பிஞ்சுகளில், நீர்சத்தின்றி காய்ந்து உதிர்ந்து வருகிறது. இதனால் இந்த ஆண்டு மா விளைச்சல் கேள்விக்குரியாகியுள்ளதாக அப்பகுதி விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

எனவே, வேளாண் துறையினர் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்தி நல்ல மகசூல் கிடைக்க உரிய ஆராய்ச்சியை மேற்கொண்டு தீர்வு காண வழி வகை செய்ய வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.