தமிழக வெற்றிக் கழக கட்சியின் கொடியில் யானை சின்னத்தை பயன்படுத்த தடை விதிக்கக் கோரி சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு பொதுச் செயலாளர் பெரியார் அன்பன் என்கிற இளங்கோவன் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் இன்று பதில் மனுத் தாக்கல் செய்தார்.
அதில்,“பகுஜன் சமாஜ் கட்சியின் கொடிக்கும், தவெக கொடிக்கும் எந்த வித தொடர்பும் இல்லை. தவெகவின் கொள்கை, கோட்பாடு தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான எதிர்கால திட்டம் ஆகியவற்றை அடிப்படையாக் கொண்டு கட்சியின் கொடி உருவாக்கப்பட்டது.
தவெக கொடி ஒரு கட்சி கொடி மட்டுமல்ல என்றும் தமிழகத்தின் கலாச்சார பெருமை, வரலாற்று பெருமை மற்றும் சமூகத்தை பிரதிபலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.







