பெங்களூரு வெற்றிப் பேரணி – கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழப்பு!

ஆர்சிபி வெற்றிப் பேரணிக் கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி பலர் உயிரிழந்திருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

நடப்பு ஆண்டு ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் 17 வருடங்களாக கோப்பையை வெல்லாத பஞ்சாப் மற்றும் பெங்களூரு அணிகள் மோதின. இதில் பெங்களூரு அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாபை வீழ்த்தி வெற்றிப் பெற்றது. இதனால் பெங்களூரு அணியின் ரசிகர்கள் பெரும் உற்சாகத்தில் திளைத்தனர்.

இந்த வெற்றியைக் கொண்டாடுவதற்காகப் பேரணிக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இதில் ஏராளமானோர் கலந்து கொள்வார்கள் என்பதற்காக பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டிருந்தன. 5000 பாதுகாப்பு பணியாளர்கள் பணி அமர்த்தப்பட்டுள்ளனர்.

இருப்பினும் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் அதிக ரசிகர்கள் குவிந்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதில் 6 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் 25 பேர் காயமடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.