சென்னை புறநகர் ரயில் நிலையமான எழும்பூர் ரயில் நிலையத்தில் உள்ள அலுவலகக் கட்டடத்தில் முதல் மாடியில் இன்று(மார்ச் 27) பிற்பகல் திடீரென தீப்பற்றி எரிந்தது. இதனால் ரயில் நிலையத்தில் பரபரப்பான சூழல் நிலவியது.
பின்பு உடனடியாக வேப்பேரி பகுதி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனால் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. மின் வயரில் கசிவு ஏற்பட்டு விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. காவல்துறையினர் இதுதொடர்பாக விசாரித்து வருகின்றனர்.
தீ விபத்து ஏற்பட்டதால் சிக்னல் தகவல் அனுப்புவதில் பிரச்னை ஏற்பட்டு ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதனை சரிசெய்யும் பணியில் தொழில் நுட்ப வல்லுநர்கள் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.








