படப்பிடிப்பின்போது அருகில் இருந்த பள்ளியின் தரம் மோசமாக இருந்ததால் பலரின் உதவியுடன் அதனை மீண்டும் புதுப்பித்து கொடுத்ததாக நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார்.
சென்னையில் விருமன் படக்குழுவினர் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இதில் பேசிய நடிகர் கார்த்தி, கிராமங்கள் மாறவில்லை கலாச்சாரம் மாறவில்லை. நிறைய பேர் கிராமத்து படம் வேண்டும் என கேட்கிறார்கள். ஆனால் படத்திற்கு படம் வித்தியாசம் வேண்டும் என்றே படம் தேர்வு செய்து வருகிறேன். பருத்திவீரன் படம் கிராமத்து படமாக தான் ஆரம்பித்தேன். கஞ்சா பூ கண்ணால பாடல் கேட்கும் போது தான் கஞ்சா செடியில் பூ பூக்கும் என்று தெரியும் என்றார்.
கிராம வாழ்க்கை மிகவும் அழகாக உள்ளது. மாமனாரை எப்படி நடத்த வேண்டும் என்று நிறைய பேருக்கு தெரியாது. கொம்பன் படம் பார்த்த ஒருவர் அதன் பிறகு தான் என்னுடைய மாமனாரிடம் பேசினேன் என்றார். என்னுடைய மாமனார் என் தோளில் தொட்டு விட்டு மட்டும் போய் விடுவார். நான் காசு வாங்காமல் படம் பண்ணுவேன் ஆனால் சம்பளம் வாங்காமல் படம் பண்ண மாட்டேன் என்று பிரகாஷ் ராஜ் சொன்னார்.
ஒவ்வொரு காட்சியிலும் புதிதாக ஏதாவது ஒன்று செய்ய வேண்டும் என சூரி யோசித்து கொண்டே இருப்பார். சூரியின் சகோதரரை பார்த்த பிறகு தான் சூரியின் உண்மையான வயது தெரிந்தது என நகைச்சுவையாக தெரிவித்தார். நிறைய கஷ்டங்களை அனுபவித்து தான் சூரி இங்கு வந்துள்ளார். வெறும் காமெடியனாக மட்டும் சூரியை நான் பார்க்கவில்லை. விடுதலை படத்திற்காக நான் காத்திருக்கேன் யுவன் உடன் இணைந்தது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.
தீபாவளி என்றால் சென்னையில் யாரும் இருக்க மாட்டார்கள். எல்லாரும் ஊருக்கு கிளம்பி சென்று விடுவார்கள். இந்த படம் ஒரு திருவிழாவாக அனைவரும் பார்க்கும் படமாக இருக்க வேண்டும் என்று நினைத்து தான் இந்த படத்தை எடுத்துள்ளோம். நம்மை சுற்றி உள்ளவர்கள் நல்ல சம்பாதிக்க வேண்டும், அவர்கள் நல்ல இருக்க வேண்டும் என சூர்யா சொல்லி கொண்டே இருப்பார். ஒரு முறை வருவது வெற்றி கிடையாது. தொடர்ந்து வந்து கொண்டே இருப்பது தான் வெற்றி.

எங்களை வாழ வைத்து கொண்டு இருக்கும் அனைவருக்கும் நான் மீண்டும் நன்றி சொல்கிறேன். பல இடங்களில் அம்மா தான் பிள்ளைகளை படிக்க வைக்கிறார்கள். அப்பாக்கள் இருப்பதே இல்லை. அவர்கள் எங்கு இருப்பார்கள் என்று உங்களுக்கு தெரியும். படம் வெற்றி பெற நான் கடவுளை வேண்டி கொள்கிறேன். சிட்டிக்கு வந்தாலும் கிராமத்து ஆட்களை வைத்து முத்தையா படம் எடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிறேன்.
படப்பிடிப்பின் போது அருகில் இருந்த பள்ளியின் தரம் மிகவும் மோசமான நிலையில் இருந்தது. அதை பலரின் உதவியுடன் மீண்டும் புதுப்பித்து கொடுத்துள்ளோம். பல இடங்களில் இது போன்ற தேவைகள் உள்ளது. தேவையான நிதி இருந்தாலும் அது சரியாக போய் சேரவில்லை என நடிகர் கார்த்தி வேதனை தெரிவித்தார்.
– இரா.நம்பிராஜன்








