“இந்த உலகத்துல ஆசையை விட பெரிய விஷயங்கள் நிறைய இருக்கு” – #RocketDriver திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது!

அறிமுக நாயகன் விஷ்வந்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘ராக்கெட் டிரைவர்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. ஸ்டோரிஸ் பை தி ஷோர் சார்பில் அனிருத் வல்லப் தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘ராக்கெட் டிரைவர்’. இந்த…

அறிமுக நாயகன் விஷ்வந்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘ராக்கெட் டிரைவர்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.

ஸ்டோரிஸ் பை தி ஷோர் சார்பில் அனிருத் வல்லப் தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘ராக்கெட் டிரைவர்’. இந்த திரைப்படத்தை ஸ்ரீராம் அனந்த சங்கர் இயக்குகிறார். ஃபேண்டசி, டிராமா-காமெடி என்டர்டெயினர் கதையம்சம் கொண்ட படமாக ‘ராக்கெட் டிரைவர்’ உருவாகிறது. இந்த திரைப்படத்தில் அறிமுக நாயகன் விஷ்வந்த் முதன்மை பாத்திரத்தில் நடிக்கிறார். 

மேலும், இந்த திரைப்படத்தில் தேசிய விருது வென்ற நாக விஷால், காத்தாடி ராமமூர்த்தி, சுனைனா, ஜெகன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு கௌசிக் கிரிஷ் இசையமைக்கிறார். தான் செய்த தவறுகளால், தனது வாழ்க்கை ஏமாற்றம் நிறைந்த ஒன்று என புலம்பி வரும் ஆட்டோ ஓட்டுநர், உலகையே மாற்ற வேண்டும் என்ற கனவு கொண்டிருக்கிறார்.

எனினும், இது தொடர்பாக அவரால் எதுவும் செய்ய முடியவில்லை. இந்த நிலையில், தனது ரோல் மாடலை அவரது 17 வயதில் காண்கிறார். இதைத் தொடர்ந்து நடைபெறும் சம்பவங்களே இப்படத்தின் கதை. இத்திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இந்த நிலையில், ‘ராக்கெட் டிரைவர்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. இந்த திரைப்படத்தின் டிரெய்லரை நடிகர் சிலம்பரசன் வெளியிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.