பூட்டை உடைத்து பத்திரப்பதிவு அலுவலகத்தில் நள்ளிரவு திருட முயற்சி!

பத்திரப்பதிவுத்துறை அலுவலகத்தில் பூட்டை உடைத்து பணம் மற்றும் ஆவணங்களைத்  திருட முயற்சி செய்த ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர். திண்டுக்கல் அருகே சாணார்பட்டியில் உள்ள  பத்திரப்பதிவு அலுவலகம் அப்பகுதியை சுற்றியுள்ள 20-க்கும் மேற்பட்ட கிராம…

பத்திரப்பதிவுத்துறை அலுவலகத்தில் பூட்டை உடைத்து பணம் மற்றும் ஆவணங்களைத்  திருட முயற்சி செய்த ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர்.

திண்டுக்கல் அருகே சாணார்பட்டியில் உள்ள  பத்திரப்பதிவு அலுவலகம் அப்பகுதியை சுற்றியுள்ள 20-க்கும் மேற்பட்ட கிராம பகுதிகளுக்கு பத்திரப்பதிவு செய்வதற்கான  அலுவலகமாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம்  அலுவல்
முடிந்து  அலுவலர்கள் வீட்டுக்கு  சென்று விட்டனர்.

இதையடுத்து,  வழக்கம் போல் இரவு பணியில் பணிபுரிந்த ஜோசப் என்பவர் மட்டும் இருந்த நிலையில் மர்ம ஆசாமி ஒருவர் நள்ளிரவு சுமார் 2 மணி அளவில் அலுவலக வளாகத்தில் நுழைந்து பூட்டி இருந்த முன்பக்க கதவை கம்பியால் உடைத்து உள்ளே புகுந்து பீரோக்களை உடைத்து பணத்தை திருட முயன்றுள்ளார்  ஆனால் பணம் இல்லாதவை அறிந்த அவர் ஆவணங்களை கீழே தள்ளி சென்றுள்ளார்.

இதையடுத்து, காலையில் பணிக்கு வந்த ஊழியர்கள் அலுவலகம் திறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்து  காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்ததின் பேரில் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து பார்த்த காவல்துறையினர், கைரேகை நிபுணர்களுக்கு தகவல் கொடுத்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

—கா.ரு்பி.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.