தாஜ்மஹால் வளாகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள உலகக்கோப்பை..!

இந்தியாவில் இருந்து தொடங்கிய ஐசிசி உலகக்கோப்பை சுற்றுப்பயணம் முக்கிய நகரங்களில் மக்களின் பார்வைக்கு காட்சிப்படுத்தப்பட்ட பின், இன்று தாஜ்மஹால் முன்பு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. நடப்பாண்டு இந்தியாவில் நடைபெறவுள்ள உலகக் கோப்பை  2023 கிரிக்கெட் தொடரின் அட்டவணையை,…

இந்தியாவில் இருந்து தொடங்கிய ஐசிசி உலகக்கோப்பை சுற்றுப்பயணம் முக்கிய நகரங்களில் மக்களின் பார்வைக்கு காட்சிப்படுத்தப்பட்ட பின், இன்று தாஜ்மஹால் முன்பு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

நடப்பாண்டு இந்தியாவில் நடைபெறவுள்ள உலகக் கோப்பை  2023 கிரிக்கெட் தொடரின் அட்டவணையை, ஐசிசி மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டது. உலகக் கோப்பை தொடருக்கு 2 மாதங்கள் இருக்கும் நிலையில் தயார் செய்யப்பட்டுள்ள அட்டவணையில் ஒட்டுமொத்தமாக 48 போட்டிகள், 46 நாட்கள் நடைபெறும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.

இதுவரையில் இந்தியா மற்ற நாடுகளுடன் இணைந்து தான் உலகக் கோப்பை தொடரை நடத்தியுள்ளது. ஆனால் முதல் முறையாக இந்தியா தனியாக உலகக் கோப்பை தொடரை நடத்துகிறது. தொடக்க போட்டியில் அக்டோபர் 5-ம் தேதி, நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணி நியூசிலாந்து அணியை அகமதாபாத் நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் எதிர்கொள்ளவுள்ளது. அதே போல போட்டியை நடத்தும் இந்தியா, அக்டோபர் 8-ம் தேதி தனது முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் எதிர்கொள்கிறது.

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை பிரபலப்படுத்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலும் இந்திய கிரிக்கெட் வாரியமும் வித்தியாசமான முயற்சியை மேற்கொண்டது. அதன் ஒரு பகுதியாக உலகக்கோப்பையை பிரத்யேக பலூனில் வைத்து அது விண்வெளிக்கு அனுப்பப்பட்டது. அது பூமியில் இருந்து சுமார் ஒரு லட்சத்து 20 ஆயிரம் அடி உயரத்தில் பூமியின் வளிமண்டலத்தின் விளிம்பில் நிலை நிறுத்தப்பட்டது. பின்னர் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் வெற்றிகரமாக தரை இறங்கியது.

https://twitter.com/ICC/status/1691705052379934750

பின்னர் ஐசிசி உலகக் கோப்பை 27 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. குவைத், பெஹ்ரைன், மலேசியா, அமெரிக்கா, உகாண்டா, பிரான்ஸ், இத்தாலி உள்ளிட்ட நாடுகளுடன், 27 முக்கிய நகரங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு மக்கள் பார்வைக்கு கோப்பை காட்சிப்படுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து உலகக்கோப்பை இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டது, அதன்படி இந்தியாவில் அதிகம் பார்வையிடப்படும் சுற்றுலா தலமான தாஜ்மகால் வளாகத்தில் தற்போது உலகக்கோப்பை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.