தகாத உறவை கண்டித்த கணவரை எரித்துக் கொலை செய்துவிட்டு நாடகமாடிய மனைவியை போலீசார் கைது செய்தனர்.
தேனி மாவட்டம் கூடலூரை சேர்ந்தவர் நாகராஜ். இவர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் உடல் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இதுகுறித்து, அவரது மனைவி முத்துமாரியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தார். அவர் மீது சந்தேகமடைந்த போலீசார், முத்துமாரியை மறைந்திருந்து கண்காணித்தனர். அப்போது, முத்துமாரிக்கு வேறு ஒருவருடன் பழக்கம் இருந்தது தெரியவந்தது.
இதனை கணவர் நாகராஜ் கண்டித்ததால், அவரை கொலை செய்து எரித்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, கணவரை கொன்று நாடகமாடிய முத்துமாரியை போலீசார் கைது செய்தனர்.







