”ஐபில் போட்டியில் ஹெல்மெட்டை எறிந்து வெற்றியை கொண்டாடிய விதம் கொஞ்சம் ஓவர் தான்” – மனம் திறந்த ஆவேஷ் கான்

நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் RCB க்கு எதிரான வெற்றியின் போது தான் ஹெல்மெட்டை எறிந்து வெற்றியை கொண்டாடிய விதம் கொஞ்சம் ஓவர்தான் என லக்னோ அணி வீரர் ஆவேஷ் கான் மனம் திறந்துள்ளார்.  ஐபிஎல்…

நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் RCB க்கு எதிரான வெற்றியின் போது தான் ஹெல்மெட்டை எறிந்து வெற்றியை கொண்டாடிய விதம் கொஞ்சம் ஓவர்தான் என லக்னோ அணி வீரர் ஆவேஷ் கான் மனம் திறந்துள்ளார். 

ஐபிஎல் என்றாலே ஒவ்வொரு நொடியும் விருவிருப்பு, ஒவ்வொரு நொடியும் கொண்டாட்டம் என ரசிகர்களை வெகுவாக கவர்ந்த திருவிழாவாகவே மாறிவிட்டது. இந்த ஐபிஎல் போட்டிகளில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வும் மிகவும் கவனம் பெறுவது இயல்பு. இதற்கு நடப்பாண்டு நடந்த ஐபிஎல் போட்டியும் விதிவிலக்கு இல்லை.

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் லக்னோ அணி திரில் வெற்றி பெற்றது. அனல் பறந்த இந்த போட்டியில், வெற்றிக்கு பின்னதாக லக்னோ வீரர் ஆவேஷ் கான், களத்திலேயே தனது ஹெல்மெட்டை கீழே எறிந்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டார்.

அந்த கொண்டாட்டம் ஆர் சி பி வீரர்கள், மைதானத்தில் இருந்த ரசிகர்கள் என அனைவரிடமும் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இறுதிப் போட்டியில் மிகவும் கடினமான ஒரு சூழலில் வெற்றி பெற்ற பின்னர் நடந்துகொள்வது போல செயல்படுகிறார் ஆவேஷ் கான் என பலரும் விமர்சனம் செய்தனர்.

இந்நிலையில், ஐபிஎல் தொடர் முடிந்தது ஒரு மாதத்திற்கு பின்னர் அந்த சம்பவம் குறித்து மனம் திறந்திருக்கிறார் லக்னோ அணி வீரர் ஆவேஷ் கான். “RCB க்கு எதிரான வெற்றியின் போது ஹெல்மெட்டை எறிந்து வெற்றியை கொண்டாடிய விதம் கொஞ்சம் ஓவர் தான். அந்த நிகழ்வுக்கு பின்பு தான் ஏன் அதனை செய்தோமோ என நினைத்துப் பார்த்தேன்” எனவும் அவர் பேசியிருக்கிறார்.

ஆவேஷ் கான் ஹெல்மெட்டை தூக்கியெறிந்த செயல் நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் மறக்கமுடியாத ஒரு சம்பவமாக பார்க்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.