முக்கியச் செய்திகள் தமிழகம்

ராணுவ வீரர்களின் உடலை கொண்டு சென்ற வாகனம் விபத்து

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் பலியான 13 ராணுவ அதிகாரிகளின் உடல்களை வெல்லிங்டனில் இருந்து சூலுருக்கு கொண்டு செல்லும் வழியில் பாதுகாப்பு பணிக்காக சென்று கொண்டிருந்த திருப்பூர் மாவட்ட அதிரடிப்படை காவல் வாகனம் விபத்துக்குள்ளாகியுள்ளது.

குன்னூரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உட்பட 13 வீரர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் 13 வீரர்களின் உடல்கள் வெல்லிங்டனில் இருந்து கோவை மாவட்டம் சூலுருக்கு கொண்டு செல்லப்பட்டு இந்திய விமானப்படையின் தனி விமானம் மூலம் டெல்லி கொண்டு செல்லப்படுகிறது.

இந்நிலையில், ஆம்புலன்சில் கொண்டு செல்லப்பட்ட வீரர்களின் உடல்களுக்கு பாதுகாப்புக்காக சென்றுக்கொண்டிருந்த திருப்பூர் மாவட்ட அதிரடிப்படை காவல் வாகனம் குன்னூர் – மேட்டுபாளையம் மலை பாதையில் எதிர்பாரத விதமாக விபத்துக்கு உள்ளானது. 3 பேர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு மீண்டும் ஆம்புலன்சின் போக்குவரத்து சீர்படுத்தப்பட்டது.

அதேபோல வீரர்களின் உடலை கொண்டு சென்ற ஆம்புலன்ஸ் ஒன்றும் விபத்துக்கு உள்ளாகியுள்ளது. இதன் காரணமாக அந்த ஆம்புலன்சிலிருந்த உடலை வேறொரு ஆம்புலன்சுக்கு மாற்றி அனுப்பி வைத்துள்ளனர்.

Advertisement:
SHARE

Related posts

மாஸ்க் அணிந்து விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்த கனடா யூடியூபர்; இணையத்தில் வைரலாகும் புகைப்படம்

Saravana Kumar

அரசின் கஜானாவை அதிமுக அரசு காலி செய்துவிட்டது; அமைச்சர் குற்றச்சாட்டு

Saravana Kumar

கோலாகலமாகக் கொண்டாடப்படும் கிறிஸ்துமஸ்

Saravana Kumar