விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம் சிறை. உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தை அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கியுள்ளார். இப்படத்தில் கதாநாயகியாக அனந்தா நடித்துள்ளார்.
சிறை திரைப்படமானது சிறையிலிருந்து நீதிமன்றத்திற்கு அழைத்து செல்லும் வழியில் காவல் அதிகாரிக்கும், குற்றவாளிக்கும் இடையே நடைபெறும் சம்பவங்களை மையமாக கொண்டுள்ளது .
‘செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ’ தயாரிக்கும் இந்தப் படத்தின் மூலம் எல்.கே.அக்ஷய் குமார் நடிகராக அறிமுகமாகிறார். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ள இத்திரைப்படம் இம்மாதம் 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில், இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.







