முக்கியச் செய்திகள்சினிமா

விஜய் ஆண்டனியின் ‘மழை பிடிக்காத மனிதன்’ டிரைலர் வெளியானது!

விஜய் ஆண்டனி நடித்து வெளியாகவுள்ள ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

இசையமைப்பாளராக தன்னுடைய சினிமா வாழ்க்கையை துவங்கியவர் விஜய் ஆண்டனி. இவர் தொடர்ந்து நடிகர், தயாரிப்பாளர், பாடகர், இயக்குநர் என பன்முகம் காட்டி வருகிறார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான ரோமியோ திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்த படத்தின் வசூல் சிறப்பாகவே அமைந்தது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதனையடுத்து, விஜய் ஆண்டனி நடித்துள்ள புதிய படமான ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தின் அறிவிப்பு வெளியானது. விஜய் மில்டன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் சத்யராஜ், டாலி தனஞ்சயா, முரளி ஷர்மா, மேகா ஆகாஷ், தலைவாசல் விஜய், சரண்யா பொன்வண்ணன் மற்றும் பிருத்வி அம்பெர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தில் சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். விஜய் ஆண்டனி பாடல்களுக்கு மட்டும் இசை அமைக்க, அச்சு ராஜாமணி பின்னணி இசையை அமைத்துள்ளார்.

இப்படத்தை கமல் போஹ்ரா, லலிதா, பிரதீப் மற்றும் பன்கஜ் போஹ்லரா இணைந்து தயாரித்துள்ளனர். இத்திரைப்படத்தின் முதல் பாடலான `தீரா மழை’ பாடலும், 2வது பாடலான “தேடியே போறேன்” பாடலும் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. சில நாட்களுக்கு முன் படத்தின் சென்சார்ஷிப் போர்ட் U/A சான்றிதழை வழங்கியது.

இந்நிலையில், ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தின் டிரைலர் இன்று (ஜூன் 29) வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, இப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. இதனை விஜய் ஆண்டனி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில் வெளியிட்டார். ட்ரெய்லரின் இடையிடையே, ‘உறவுகள் தொடர்கதை’ பாடலின் துணுக்குகள் வருவது ஈர்ப்பைத் தருகிறது. படம் ஜூலையில் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Mazhai Pidikkatha Manithan -Trailer | Vijay Antony | Sathyaraj | Vijay Milton
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

Related posts

மியான்மரில் சிக்கியுள்ள இந்திய இளைஞர்களை மீட்க வேண்டும் – வேல்முருகன் வலியுறுத்தல்

Dinesh A

மத்தியப் பிரதேசத்தில் ஆட்சியை தக்க வைத்த பாஜக | 5-வது முறையாக முதல்வராவாரா சிவராஜ் சிங் சவுகான்?

Web Editor

விஷச் சாராய விவகாரம் | ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையம்!

Web Editor

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading