ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 2-வது டி20 – இந்திய அணி டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு!

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இந்த 3 போட்டிகளும் டெல்லியில் நடக்கின்றன. முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில், இரு அணிகள் இடையிலான இரண்டாவது டி20 போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் ஆடுகிறது.

இந்திய அணியில் சஞ்சு சாம்சன்(wk), அபிஷேக் சர்மா, இஷான் கிஷன், ஷ்ரேயாஸ் ஐயர்(c), திலக் வர்மா, நிதிஷ் குமார் ரெட்டி, ஷிவம் துபே, அக்சர் படேல், ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங், ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் ஆடுகின்றனர்.

ஆப்கானிஸ்தான் அணியில் ஹ்மானுல்லா குர்பாஸ்(wk), இப்ராஹிம் சத்ரான்(c), செடிகுல்லா அடல், குல்பாடின் நைப், தர்வீஷ் ரசூலி, அஸ்மத்துல்லா உமர்சாய், முகமது நபி, ரஷித் கான், நூர் அகமது, முஜீப் உர் ரஹ்மான், ஃபசல்ஹாக் ஃபரூக்கி ஆகியோர் ஆடுகின்றனர்.

அயர்லாந்து, இங்கிலாந்து ஆகிய நாடுகளுடன் டி20 தொடரை பரிகொடுத்த இந்திஒய் அணி இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.