விஜய் நடிக்கும் தளபதி 67 படத்தின் டைட்டிலை படக்குழு வெளியிட்டுள்ளது.
நடிகர் விஜய்யின் வாரிசு திரைப்படம், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த ஜனவரி 11ஆம் தேதி வெளியானது. கலவையான விமர்சனங்களைப் பெற்ற இப்படம் தொடர்ந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது. வாரிசு கொண்டாட்டத்தில் இருக்கும் விஜய் ரசிகர்கள், தளபதி 67 படத்தின் அப்டேட்டிற்காக காத்துக் கொண்டிருந்தனர். அண்மையில் தளபதி 67 படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ், அப்படத்தின் அப்டேட் விரைவில் வரும் என்று தெரிவித்தார்.
https://twitter.com/7screenstudio/status/1620038425763274753
தளபதி 67 படத்தில் த்ரிஷா, பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், கவுதம் மேனன், மிஷ்கின், பிரியா ஆனந்த் உள்ளிட்ட பல திரை நட்சத்திரங்கள் நடித்து வருவதாகத் தகவல்கள் வெளியானது. மேலும், கேங்ஸ்டர் படமாகவும் ஆக்சன் படமாகவும் உருவாகும் தளபதி 67 படத்தின் படப்பிடிப்பும் தொடங்கியுள்ளது.
https://twitter.com/SonyMusicSouth/status/1621471146779754497
இந்நிலையில் ரசிகர்களின் காத்திருப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தினம்தோறும் பல அப்டேட்டுகளை வாரி வழங்கிக் கொண்டிருக்கிறது படக்குழு. ஏற்கனவே படத்தின் நடிகர், நடிகைகளின் தகவல்களை வெளியிட்ட படக்குழு, தற்போது படத்தின் டைட்டிலை வெளியிட்டுள்ளது.
தளபதி 67 படத்தின் தலைப்பு ’லியோ’ என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை வீடியோவாக வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய நான்கு மொழிகளில் இப்படம் வெளியாகவுள்ளது. மேலும் இப்படம் அக்டோபர் மாதம் 19 ஆம் தேதி வெளியாகவுள்ளது. படக்குழுவின் இந்த அறிவிப்பால் விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சியின் உச்சிக்கே சென்றுள்ளனர்.







