மயில்கள் சூழ அருவாளோடு சிவாகார்த்தியேன்….. எஸ்.கே. 26 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு………!

சிவகார்த்திகேயனின் நடிக்கும் புதிய படத்திற்கு ’சேயோன்’ என பெயரிடப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான திரைப்படம் பராசக்தி. சிவகார்திகேயனின் 25 ஆவது படமான பராசக்தி கலவையான விமர்சனங்களை பெற்றாலும் 100 கோடிக்கும் மேலாக வசூலித்தது.

இந்த நிலையில் சிவகார்த்திகேயனின் 26 ஆவது படம் குறித்த அப்டேட் வெளியகியுள்ளது. அதன் படி நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம் இண்டர்நேஷல் தயாரிக்கும் புதிய படத்தில் சிவாகர்த்திகேயன் நடிக்க உள்ளார். இப்படத்தை தாய் கிழவி பட இயக்குநரான சிவகுமார் முருகேசன் இயக்குகிறார்.

’சேயோன்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

 

மயில்கள் சூழ அருவாளோடு சிவகார்த்திகேயன் இருக்கும் போஸ்டர் படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பை உருவாகியுள்ளது.  இப்படம் கிராமத்து கதைக்களத்தில் உருவாக உள்ளதாக கூறப்படுகிறது. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் இதனை உறுதிபடுத்தும் விதமாக அமைந்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.